விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்கு
புதைப்படிவ காலம்:CryogenianPresent, 670–0Ma
உயிரியல் வகைப்பாடு e
திணை:
அனிமாலியா

தொகுதி

விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது பல உயிரணு உயிரி (Metazoa), என்பது இராச்சியத்தின் பெரும்பாலும் மெய்க்கருவுயிரி உயிரினங்களின் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை அனைத்து உயிரினங்களும் கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும், ஆக்சிசனை சுவாசிப்பவையாகவும், தன்னிச்சையாக நகரக்கூடியவையாகவும் (en:Motility), பாலினப்பெருக்கம் செய்பவையாகவும், முளைய விருத்தியின்போது வெற்றுக்கோள உயிரணுக்களான கருக்கோளத்திலிருந்து (en:Blastula) வளர்ச்சியடையும் உயிரினமாகவும் இருக்கின்றன.

உலகில் சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான விலங்கு சிற்றினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பினும், கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிற்றினங்களே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1 மில்லியன் பூச்சியினங்களாகும். விலங்குகளின் நீளம் 8.5 மைக்ரோமீட்டர் (0.00033 அங்குலம்) முதல் 33.6 மீட்டர் (110 அடி) வரை வேறுபடுகிறது. இவ்வாறு வேறுபட்ட சிற்றினங்கள் தமக்கிடையிலும் சூழல்களுக்கிடையிலும் சிக்கலான தொடர்புகளைக் கொண்டுள்ளன. சிக்கலான உணவு வலை (en:Food web) அமைப்பையும் இவை கொண்டுள்ளன. அனிமாலியா என்ற இராச்சியம் மனிதர்களையும் உள்ளடக்கியது ஆயினும் பேச்சுவழக்குப் பயன்பாட்டில் விலங்கு என்ற சொல் பெரும்பாலும் மனிதரல்லாத விலங்குகளை மட்டுமே குறிக்கிறது.

பெரும்பாலான உயிருள்ள விலங்கினங்கள் இருபக்கச்சமச்சீர் உடலமைப்பைக் கொண்டன. இவற்றுள் உருளைப்புழுக்கள், கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகள் போன்ற முதுகெலும்பிலி தொகுதிகளை உள்ளடக்கிய புரோட்டோஸ்டோம்கள் காணப்படுகின்றன. இத்துடன் முதுகெலும்பிகளைக் கொண்ட முதுகுநாணிகள், மற்றும் முட்தோலிகள், ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய டியூட்டெரோஸ்டோம்களும் அடங்குகின்றன.

பிரீகாம்ப்ரியனின் எடியாக்கரன் உயிரியல் தரவுகளில் ஆரம்பகால விலங்குகள் பற்றிய தரவுகள் விளக்கப்பட்டுள்ளன. சுமார் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கேம்ப்ரியன் வெடிப்பின் போது, பல நவீன விலங்குத் தொகுதிகள் தொல்லுயிர் எச்சங்களாகக் கிடைத்தபோது, கடல் உயிரினங்களாக தெளிவாக நிறுவப்பட்டன. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான 6,331 மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இவை 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பெயர் வரலாறு[தொகு]

"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை அனிமலே என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும்.[3] உயிரியல் வரையறையானது அனிமாலியா இராச்சியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.[4] இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக்[மேற்கோள் தேவை] குறிக்கிறது.[5][6][7][8] விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதனையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. "மெட்டாசூவா" என்ற சொல் பண்டைய கிரேக்க μετα (மெட்டா, "பின்னர்" என்று பொருள்படப் பயன்படுத்தப்பட்டது) மற்றும் ζῷᾰ (zōia, ζῷον zōion "விலங்கு" என்பதன் பன்மை) எனும் சொற்கலிலிருந்து உருவானது.[9][10]

பண்புகள்[தொகு]

பிற உயிரினங்களிலிருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் பல உயிரணுக்களாலான மெய்க்கருவுயிரிகளாக இருக்கின்றன.[11] இப் பண்புகள் இவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஒரு உயிரணு கொண்ட உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இவை தன்னூட்ட உயிரிகள் போல் தமக்கான உணவைத் தாமே தயார் செய்ய முடியாதவையாக[12] தமக்கான உணவுத் தேவைக்கு வேறு உயிரிகளில் தங்கியிருக்கும் சார்பூட்ட உயிரிகளாக இருக்கின்றன.[13] இந்தப் பண்பு தாவரங்கள் மற்றும் அல்காக்கள் போன்றவற்றிலிருந்து இவற்றைப் பிரித்தறிய உதவுகின்றன.[12][14] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் தாமாக நகரும் தன்மை கொண்டனவாக உள்ளன[15] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைய விருத்தியின்போது, முளையமானது ஒரு வெற்றுக்கோள வடிவில் விருத்தியடைய ஆரம்பிக்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.

உடலமைப்பு[தொகு]

விலங்குகள் தனித்தனி இழையங்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகியவற்றில் மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலம் இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த சமிபாட்டுத் தொகுதியும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும்.[16] இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசூவான்கள் (பல உயிரணு உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் யூமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன.

இனப்பெருக்கமும், விருத்தியும்[தொகு]

விலங்குகளில் முளையம் (1) பிளஸ்டியூலா எனப்படும் வெற்றுக்கோள வடிவ அமைப்பு (2).

ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பாலியல் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.[17] அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க உயிரணுக்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப்பிரிவு நடக்கிறது. அதன்மூலம் உருவாகும் ஒருமடிய நிலையிலுள்ள இவ்விரு பாலணுக்களும் ஒன்றிணைந்து கருவணுக்களை உருவாக்கி, அவை புதிய தனியன்களாய் வளர்ச்சியுறுகின்றன.

கலவியற்ற இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. கன்னிப்பிறப்பு மூலம் இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பெற்றோரின் மரபணுப் படியெடுப்புப் போன்று இருக்கும். அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (en:fragmentation) முறை, அல்லது அரும்புதல் (en:Budding) முறை மூலமாகவும் இது நடைபெறுகின்றது. [18][19]

ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (en:Blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளம் தோன்றுகிறது. இது மறு ஒழுங்கமைவுககும், உயிரணு வேற்றுமைப்பாட்டுக்கும்யும் உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோளங்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறு ஒழுங்கமைவுக்குள் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட உயிரணுக் கூட்டம் ஒரே மாதிரியான வேற்றுமைப்பாட்டுக்கு உட்படும்போது இழையமாக விருத்தி அடையும். பின்னர் வெவ்வேறு இழையங்கள் கூட்டாக இணைந்து ஒரு தொழிலைச் செய்யும் உறுப்பாக விருத்தியடையும்.

உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்[தொகு]

விலங்குகள தமது உணவுத்தேவையை அல்லது சக்திக்கான ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தைப் பொறுத்து சில சூழலியல் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஊனுண்ணிகள், தாவர உண்ணிகள், அனைத்துண்ணிகள், கழிவுகள், குப்பைகள் போன்ற அழிவுக்குள்ளாகும் பதார்த்தங்களிலிருந்து தமது உணவைப் பெறும் சார்பூட்ட உயிரிகளான கழிவுண்ணிகள் (en:Ditritivore)[20], ஒட்டுண்ணி வாழ்வு வாழும் ஒட்டுண்ணிகள் ஆகியன இவற்றுள் அடங்கும்.[21] விலங்குகளிக்கிடையிலான உணவுண்ணும் முறையை அடிப்படையாகக் கொண்ட தொடர்பானது சிக்கலான உணவு வலையை உருவாக்கும். அநேகமாக அனைத்து பல்கல இரைகெளவிகளும் விலங்குகளே.[22] 

ஊனுண்ணிகள் அல்லது அனைத்துண்ணிகளில் இரைகௌவல் என்பது ஒரு நுகர்வோர் வளத் தொடர்பாடல் ஆகும்.[23] இதில் வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு), ஒரு இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்கின்றது. ஊனுண்ணிகள் அல்லது அனைத்துண்ணிகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் இரைகௌவல் எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு கழிவுண்ணி அல்லது பிணந்திண்ணி (detritivory) வகை ஆகும். அதாவது இறந்த இரையை உண்பது அல்லது நுகர்வது. இன்னொரு பிரிவு ஒட்டுண்ணிகள் ஆகும். சில சமயங்களில் உண்ணும் நடத்தைகளுக்கு இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக வேட்டையாடும் விலங்குகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த இரையின் உடலைத் தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. அப்போது அந்த வழித்தோன்றல்கள் ஒட்டுண்ணிகளாகத் தமது உணவைப் பெற்றுக் கொள்கின்றன.

சில விலங்குகள் வேறுபட்ட உணவு முறைகளைச் சேர்த்துப் பயன்படுத்தும். எடுத்துக் காட்டாக, சில பூச்சியினங்களில் முதிர்ந்த விலங்கானது பூவிலிருக்கும் தேனைத் தமது உணவாகக் கொள்ளும். ஆனால், அவை தாவரத்தின் இலைகளில் இடும் முட்டைகளிலிருந்து உருவாகும் குடம்பிகள் தாவரத்தை உண்பதன் மூலம் தாவரத்தையே அழித்துவிடும்.[24][25]

ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு (en:Anti-predator adaptation) வழிவகுத்துள்ளது.[26][27]

அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் சக்தியை, எளிய சர்க்கரைகளாக மாற்றுகின்றன. கரியமில வாயு (CO2) மற்றும் நீர் (H2O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C6H12O6) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றிப் பிராண வாயுவை (O2) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம்.

மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு[தொகு]

விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன.

விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.[28][29][30]

பல்லுயிர்தன்மை[தொகு]

அளவு[தொகு]

விலங்குகளில் நீலத் திமிங்கிலம் (Balaenoptera musculus) இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரிய விலங்கு ஆகும், இதன் எடை 190 டன்கள் வரையும் நீளம் 33.6 மீட்டர் (110 அடி) வரையும் உள்ளது.[31][32][33] நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு ஆப்பிரிக்க யானை (Loxodonta africana). இதன் எடை 12.25 டன்னும்[31] நீளம் 10.67 மீட்டர் (35.0 அடி) கொண்டது. சுமார் 73 டன் எடையுள்ள சௌரோபாட் டைனோசர்கள், அர்ஜென்டினோசொரசு போன்ற டைனோசர்களும் வாழ்ந்துள்ளன. 39 மீட்டர் நீளமுடைய சூப்பர்சொரசு இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரிய நிலவாழ் விலங்குகளாகும்.[34][35] பல விலங்குகள் நுண்ணியவை. இவற்றை நுண்ணோக்கி கொண்டே காண இயலும். இவற்றில் சில: மிக்சோசூவா (புழையுடலிகளில் காணப்படும் ஒட்டுண்ணிகள்) 20 மைக்ரோமீட்டருக்கு மேல் வளராது.[36] மேலும் சிறிய இனங்களில் ஒன்று மிக்சோபோலசு சீகல். இது முழுமையாக வளரும் போது 8.5 மைக்ரோமீட்டருக்கு மேல் இல்லை.[37]

எண்ணிக்கையும் வாழிடமும்[தொகு]

பின்வரும் அட்டவணையில், விலங்கு குழுக்களின் முக்கிய வாழ்விடங்கள் (நிலப்பரப்பு, நன்னீர்[38] மற்றும் கடல்[39]) மற்றும் வாழ்க்கை முறை (சுதந்திரமான வாழ்க்கை அல்லது ஒட்டுண்ணி வாழ்க்கை[40]) குறித்து விவரங்கள் தரப்பட்டுள்ளன.[41] விவரிக்கப்பட்டுள்ள சிற்றினங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை இந்த அட்டவணைப் பட்டியலிடுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிற்றினங்களின் மதிப்பீடுகள் அறிவியல் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளன. பல்வேறு கணிப்பு முறைகளின் அடிப்படையில் இவை மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை பெருமளவில் மாறுபடும். உதாரணமாக, சுமார் 25,000–27,000 வகையான நூற்புழுக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூற்புழு சிற்றினங்களின் மொத்த எண்ணிக்கையின் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளில் 10,000–20,000 அடங்கும்.[42] வகைபிரித்தல் படிநிலையில் உள்ள வடிவங்களைப் பயன்படுத்தி, விலங்கு இனங்களின் மொத்த எண்ணிக்கை-இதுவரை விவரிக்கப்படாதவை உட்பட-2011 இல் சுமார் 7.77 மில்லியனாக கணக்கிடப்பட்டது.[43][44][a]

தொகுதி உதாரணம் விவரிக்கப்பட்டுள்ள சிற்றினங்கள் நிலம் கடல் நன்னீர் தன்னிச்சையாக வாழ்வன ஒட்டுண்ணி வாழ்க்கை
கணுக்காலி wasp 1,257,000[41] 1,000,000
(பூச்சிகள்)[46]
>40,000
(மலக்கோஇசுடுருக்கா)[47]
94,000[38] ஆம்[39] >45,000[b][40]
மெல்லுடலி snail 85,000[41]
107,000[48]
35,000[48] 60,000[48] 5,000[38]
12,000[48]
ஆம்[39] >5,600[40]
முதுகுநாணி green spotted frog facing right >70,000[41][49] 23,000[50] 13,000[50] 18,000[38]
9,000[50]
ஆம் 40
(பூனைமீன்)[40][51]
தட்டைப் புழுக்கள் 29,500[41] ஆம்[52] ஆம்[39] 1,300[38] ஆம்[39]

3,000–6,500[53]

>40,000[40]

4,000–25,000[53]

நூற்புழுக்கள் 25,000[41] ஆம் (மணல்)[39] 4,000[42] 2,000[38] 11,000[42] 14,000[42]
வளைதழைப்புழுக்கள் 17,000[41] ஆம் (மணல்)[39] ஆம்[39] 1,750[38] ஆம் 400[40]
கடற்காஞ்சொறி Table coral 16,000[41] ஆம்[39] ஆம் (சில)[39] ஆம்[39] >1,350
(மிக்சோசூவா)[40]
பஞ்சுயிரி 10,800[41] ஆம்[39] 200–300[38] ஆம் ஆம்[54]
முட்தோலிகள் 7,500[41] 7,500[41] ஆம்[39]
பிரையோசூவா 6,000[41] ஆம்[39] 60–80[38] ஆம்
ரோட்டிபெரா 2,000[41] >400[55] 2,000[38] ஆம்
தார்டிகிரேடா 1,335[41] ஆம்[56]
(ஈரமான தாவரங்கள்)
ஆம் ஆம் ஆம்
கேசுடுரோடிரிச்சா 794[41] ஆம்[56] ஆம் ஆம்
சீனோசீலோமார்பா 430[41] ஆம்[56] ஆம்
நிமடோமார்பா 354[41] ஆம்
(ஈரப்பதமான இடங்கள்)[56]
ஆம்
(ஒரு பேரினம், நெக்டானா)[57]
ஆம் ஆம்
(முதிருயிரிகள்)[56]
ஆம்
(இளம் உயிரி நிலையில்)[56]
பிராங்கியோபோடா 396[41]
(30,000 அழிந்துவிட்டன)[56]
ஆம்[56] ஆம்
கின்னோரைங்சா 196[41] ஆம் (களிமண்)[56] ஆம்
.footer { position: fixed; left: 0; bottom: 0; width: 100%; background-color: white; color: black; text-align: center; }